அகமது சபீக்
எகிப்தின் முன்னாள் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
அகமது மொகமது சஃபீக் (Ahmed Mohamed Shafik, அரபு மொழி: أحمد محمد شفيق; பிறப்பு: நவம்பர் 1941) ஓர் எகிப்திய அரசியல்வாதி. மூத்த எகிப்திய வான்படைத் தளபதியாக இருந்து பின்னர் வான் போக்குவரத்து அமைச்சராகவும் எகிப்திய பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர். சனவரி 31, 2011 முதல் மார்ச்சு 3, 2011 வரை 33 நாட்களுக்குப் பிரதமராகப் பணியாற்றினார்.
அகமது சபீக் أحمد شفيق | |
---|---|
எகிப்தியப் பிரதமர் | |
பதவியில் 31 சனவரி 2011 – 3 மார்ச்சு 2011 | |
குடியரசுத் தலைவர் | ஓசுனி முபாரக் முகமது உசைன் தந்தவி (பொறுப்பு) |
பின்னவர் | எசாம் சராஃப் |
குடிசார் வான் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 18 செப்டம்பர் 2002 – 31 சனவரி 2011 | |
பிரதமர் | அடெஃப் எபீத் அகமது நசீஃப் |
முன்னையவர் | அகமது அப்தெல் ரகுமான் நாசர் |
பின்னவர் | இப்ராகிம் மனா |
எகிப்திய வான் படைத் தளபதி | |
பதவியில் 7 ஏப்ரல் 1996 – 1 மார்ச்சு 2002 | |
குடியரசுத் தலைவர் | ஓசுனி முபாரக் |
முன்னையவர் | அகமது அப்தெல் ரகுமான் நாசர் |
பின்னவர் | மாக்டி கலால் சராவி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | predecessor அகமது நசீஃப் நவம்பர் 1941 (அகவை 82) கெய்ரோ, எகிப்து |
இறப்பு | predecessor அகமது நசீஃப் |
இளைப்பாறுமிடம் | predecessor அகமது நசீஃப் |
அரசியல் கட்சி | சுயேட்சை |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | எகிப்திய வான்படை அகாதமி |
Military service | |
பற்றிணைப்பு | எகிப்து |
கிளை/சேவை | எகிப்து வான்படை |
சேவை ஆண்டுகள் | 1961–2002 |
தரம் | ஏர் மார்ஷல் |
போர்கள்/யுத்தங்கள் | வடக்கு ஏமன் குடிமக்கள் போர் ஆறு நாள் போர் உரசல் போர் அக்டோபர் போர் |
தனது பணி வாழ்வை சண்டை வானூர்தி ஓட்டுனராகத் துவங்கி அணி, பிரிவு மற்றும் தள தலைவராக முன்னேறினார். 1996 முதல் 2002 வரை எகிப்திய வான்படையின் தளபதியாக விளங்கினார்; ஏர் மார்ஷல் என்ற தரநிலையை எட்டினார். பணி ஓய்விற்குப் பின்னர் எகிப்திய அரசில் 2002 முதல் 2011 வரை வான் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார்.
2011 எகிப்திய புரட்சியை அடுத்து சனவரி 31, 2011இல் குடியரசுத் தலைவர் ஓசுனி முபாரக் சபீக்கை பிரதமராக நியமித்தார்.[1] தொலைக்காட்சி அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் முதன்மையான எகிப்திய எழுத்தாளர் ஒருவர் அவரை முபாரக் அரசின் எச்சமே எனக் குற்றம் சாட்டியதை அடுத்து ஒரு மாதமே அந்தப் பதவியில் இருந்த சபீக் மார்ச்சு 3, 2011இல் பதவி விலகினார்.[2]
நவம்பர் 2011இல் சபீக் எகிப்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இவரை முந்தைய ஆட்சியின் நீட்சியாகக் கருதிய பலரால் இந்த அறிவிப்பு கண்டிக்கப்பட்டது. தேர்தல் கூட்டமொன்றில் இவர் மீது காலணி வீசப்பட்டது.[3] இசுலாமிய மதவாத அரசியல்வாதிகளுக்கு எதிராக இவருக்கு எகிப்தின் கிறித்தவ சிறுபான்மையினர் ஆதரவளித்தனர்.[4]
மே 2012இல் நடந்த முதற்கட்ட தேர்தலில் முசுலிம் சகோதரத்துவம் சார்ந்த மொகமது மோர்சியும் சபீக்கும் முன்னணியில் தேர்வாயுள்ளனர். சூன்,2012இல் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் இந்த இருவருக்கும் இடையே தெரிவு நடைபெறவுள்ளது.[5]