அக்கரைப்பற்று
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
அக்கரைப்பற்று என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற பிரதேசமாகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் அக்கரைப்பற்று, நாடு ...
அக்கரைப்பற்று | |
---|---|
நகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பி.செ. பிரிவு | அக்கரைப்பற்று |
மூடு
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபையாக அக்கரைப்பற்றின் மத்திய பகுதி தரமுயர்த்தப்பட்டதோடு அதன் மேற்குப்பகுதியான குடியிருப்பு அக்கரைப்பற்று பிரதேசசபையாக மாற்றப்பட்டது. இது அக்கரைப்பற்று மேற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.