அச்சே
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அச்சே, அச்சி, அல்லது ஆச்சே (ஆங்கிலம்: Aceh அல்லது Aceh Province; அச்சே: Nanggroë Acèh; இந்தோனேசியம்: Provinsi Aceh) என்பது இந்தோனேசியாவின் மேற்குமுனைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்த மாநிலம் இந்தோனேசியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளில் (Autonomous Administrative Division) ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
அச்சே தாருல் சலாம்
Aceh Darussalam اچيه دارالسلام | |
---|---|
தன்னாட்சி நிர்வாகப் பகுதி | |
குறிக்கோளுரை: "பஞ்சசீதா"(சமசுகிருதம்) "ஐந்து குறிக்கோள்கள்" | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகரம் | பண்டா ஆச்சே |
அரசு | |
• ஆளுநர் | சைனி அப்துல்லா (ஆச்சே கட்சி) |
• துணை ஆளுநர் | முசாகிர் மனாப் |
பரப்பளவு | |
• மொத்தம் | 58,376 km2 (22,539 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 47,31,705 |
• அடர்த்தி | 81/km2 (210/sq mi) |
மக்கள் | |
• இனக் குழுக்கள் | 70.65% அச்சே இனம் 8.94% சாவக இனம் 7.22% காயோ இனம் 3.29% பலாக் 2.13% அலாஸ் இனம் 1.49% சிமுலு இனம் 1.40 அனெக் ஜாமீ இனம் 1.11% மலாய் 1.04% சிங்கில் இனம் 0.74% மினாங்கபாவு மக்கள்[2] |
• சமயம் | 98.19% இசுலாம் (அதிகாரப்பூர்வமானது) |
• மொழிகள் | அச்சே மொழி, இந்தோனேசிய மொழி (அலுவல்) |
நேர வலயம் | நேரம் (UTC+7) |
இணையதளம் | www.acehprov.go.id |
இதன் தலைநகரம் பண்டா ஆச்சே (Banda Aceh) ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. மத ரீதியாக ஆச்சே மாநிலம் ஒரு பழமைவாத பிரதேசம்; மற்றும் சரியா சட்டத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப் படுத்தும் ஒரே இந்தோனேசிய மாநிலமும் ஆகும்.
இங்கு 10 வெவ்வேறு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அச்சே இன மக்கள் ஆவர். அச்சே இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி ஆகியவை கிடைக்கின்றன.
உலகிலேயே அதிய எரிவளி கிடைக்கும் இடங்களில் இது முன்னணியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மதப் பழமைவாதக் கொள்கையுடைய மக்கள் அதிகம் வசிக்கு பகுதியாகும்.[3]