அனாக் புக்கிட்
அனாக் புக்கிட் (Anak Bukit) மலேசியா, கெடா மாநிலத்தின் அரச நகரம். இது தனி ஒரு துணை மாவட்டமும் / From Wikipedia, the free encyclopedia
அனாக் புக்கிட் (Anak Bukit) மலேசியா, கெடா மாநிலத்தின் அரச நகரம். இது தனி ஒரு துணை மாவட்டமும் ஆகும். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. கெடா மாநில சுல்தான் அவர்களின் அரண்மனை இங்குதான் அமைந்து உள்ளது. கோலா கெடா நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்து இருக்கும் இந்த நகரத்திற்கு அருகில் அலோர் மேரா மற்றும் கெப்பாலா பத்தாஸ் நகரங்கள் உள்ளன.
விரைவான உண்மைகள் அனாக் புக்கிட்Anak Bukit கெடா அரச நகரம், நாடு ...
அனாக் புக்கிட்
Anak Bukit கெடா அரச நகரம் | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
உருவாக்கம் | 1800 |
நேர வலயம் | ஒ.ச.நே + 08:00 |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மூடு
கெடாவின் அரச அரண்மனை இங்கு அமைந்து இருப்பதால் இந்த நகரம் கெடாவின் அரச நகரம் என்று அழைக்கப் படுகிறது. மலேசியாவின் முன்னாள் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் அலீம் முவாடாம் சாவின் பிறப்பிடமாகவும் அறியப் படுகிறது.[1]