அமித் சா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அமித் ஷா (ஆங்கில மொழி: Amit Shah, பிறப்பு:1964) இந்திய உள்துறை அமைச்சர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.[1] மோதியின் குசராத் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட காவல்துறை மோதல் கொலைகள் வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.[2][3][4] 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.[5] இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சி பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.[6]
அமித் சா | |
---|---|
இந்தியாவின் உள்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ராஜ்நாத் சிங் |
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சூலை 2014 | |
முன்னையவர் | அத்வானி |
பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
பதவியில் 9 சூலை 2014 – 20 சனவரி 2020 | |
முன்னையவர் | ராஜ்நாத் சிங் |
பின்னவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | அத்வானி |
தொகுதி | காந்திநகர் |
பெரும்பான்மை | 8,94,624 (69.6%) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 19 ஆகத்து 2017 – 29 மே 2019 | |
முன்னையவர் | திலிப் பாண்டியா |
பின்னவர் | சுப்பிரமணியம் செயசங்கர் |
தொகுதி | குசராத்து |
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | கௌசிக் படேல் |
தொகுதி | நாரன்புரா |
பதவியில் 1997–2012 | |
முன்னையவர் | ஹரிஸ்சந்திர படேல் |
பின்னவர் | பதவி ரத்து செய்யப்பட்டது |
தொகுதி | சர்கேஜ் |
மாநில அமைச்சர், குஜராத் அரசு | |
பதவியில் 2002–2012 | |
துறை | உள்துறை அமைச்சகம் |
முதல்வர் | நரேந்திர மோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமித் அனில்சந்திர சா 22 அக்டோபர் 1964 (1964-10-22) (அகவை 59) மும்பை, மகாராட்டிரம் இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சோனல் சா |
பிள்ளைகள் | ஜெய் சா |
முன்னாள் கல்லூரி | குஜராத் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்) |
இணையத்தளம் | www |