அலுமினியம் சிலிக்கேட்டு
From Wikipedia, the free encyclopedia
அலுமினியம் சிலிக்கேட்டு அல்லது அலுமினம் சிலிக்கேட்டு (Aluminium silicate or aluminum silicate) என்பது அலுமினியம் ஆக்சைடு, Al2O3 மற்றும் சிலிக்கன் ஈராக்சைடுSiO2 ஆகிய சேர்மங்களில் இருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும். இவை இயற்கையாகவே தோன்றுவனவாகவும் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய நீரிலிகள் அல்லது நீரேற்றுகளாகவும் இருக்கலாம். அலுமினியம் சிலிக்கேட்டுகளின் பொது வாய்ப்பாடு பெரும்பாலும் xAl2O3.ySiO2.zH2O என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் அலுமினியம் சிலிக்கேட்டு என்ற பகுப்பு கீழ்கண்ட சேர்மங்களையும் உள்ளடக்கியது ஆகும்.
- Al2SiO5, (Al2O3.SiO2), இயற்கையில் கனிமங்களாகத் தோன்றுபவை, அண்டலுசைட்டு, கயனைட்டு மற்றும் சில்லிமனைட்டு முதலியன. இவை வெவ்வேறு படிக வடிவங்களில் காணப்படுகின்றன.
- Al2Si2O5(OH)4, (Al2O3·2SiO2·2H2O), இயற்கையில் கயோலினைட்டு கனிமங்களாகத் தோன்றுபவை, இவை அலுமினியம் சிலிக்கேட்டு இருநீரேற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1] நுண்ணியத் துகளாகக் காணப்படும் இத்தூள் காகிதம், இரப்பர் ஆகியனவற்றில் நிரப்பியாகவும் மற்றும் சாயத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது.[1]
- Al2Si2O7, (Al2O3.2SiO2), மெட்டா கயோலினைட்டு என்று அழைக்கப்படும் இவை கயோலினை 450 0 செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் உண்டாகின்றன. தொகுப்பிலுள்ள
- Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2. தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.[1]
- Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் [2] நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2 தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.
- 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
12141-46-7 N | |
ChemSpider | 8488719 N |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10313254 |
| |
பண்புகள் | |
Al 2SiO 5 | |
வாய்ப்பாட்டு எடை | 162.0456 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு