ஆடி (இயற்பியல்)
ஒளியை எதிரொளிக்கும் ஒரு கண்ணாடி / From Wikipedia, the free encyclopedia
ஆடி (ஒலிப்புⓘ) (Mirror) என்பது அதன் ஒரு மேற்பரப்பாவது ஒளியைத் தெறிக்குமாறு அமைந்துள்ள ஒரு பொருள் ஆகும். ஆடிகள் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் மிகவும் பொதுவான புழக்கத்தில் உள்ளது, தளவாடி ஆகும். தட்டையான மேற்பரப்பைக் கொண்ட இது அதற்கு முன்னுள்ள பொருட்களின் விம்பங்களை அதே அளவில் தெளிவாகக் காட்ட வல்லது. வளைந்த பரப்புக்களைக் கொண்ட ஆடிகளும் உள்ளன. இவ்வாறான ஆடிகள் பிம்பங்களைப் பெருப்பித்து அல்லது சிறிதாக்கிக் காட்டுவதுடன், ஒளிக் கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை. இதனால் இவை, இவ்வியல்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் பயன்படுகின்றன.[1][2][3]