ஆப்பியா (Apia) சமோவாவின் மிகப்பெரிய நகரமும் நாட்டுத் தலைநகரமும் ஆகும். 1900 முதல் 1919 வரை இது செருமானியச் சமோவாவின் தலைநகரமாக இருந்தது. சமோவாவின் இரண்டாவது மிகப்பெரும் தீவான உபோலுவின் மத்திய வடக்கு கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. சமோவாவிலுள்ள ஒரே "நகரமான" ஆப்பியா டுவாமசாகா மாவட்டத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் ஆப்பியா Ah-Pee-Ah, நாடு ...
ஆப்பியா
Ah-Pee-Ah
Thumb
ஆப்பியாவிலுள்ள சமோவா அரசுக் கட்டிடங்களின் காட்சி
Thumb
Map of Apia
நாடுசமோவாசமோவா
மாவட்டம்டுவாமசாகா
தொகுதிவைமூகா மேற்கு, பலேடா கிழக்கு
நிறுவப்பட்டது1850கள்
தலைநகரானது1959
பரப்பளவு
  நகர்ப்புறம்
51.8 km2 (20.0 sq mi)
ஏற்றம்2 m (7 ft)
மக்கள்தொகை
 (2011)
  நகர்ப்புறம்
36,735
  நகர்ப்புற அடர்த்தி6,534.27/km2 (2,534.48/sq mi)
நேர வலயம்ஒசநே+13 (ஒசநே+13:00)
  கோடை (பசேநே)ஒசநே+14 (ஒசநே+14:00)
மூடு

ஆப்பியா நகரகப் பகுதியின் மக்கள்தொகை 36,735 (2011 கணக்கெடுப்பு) ஆகும்.[2] லெடோகோ சிற்றூரிலிருந்து வைடெலே எனப்படும் ஆப்பியாவின் புதுத் தொழிற்பேட்டை வரை அபியா நகரகப் பகுதி விரிந்துள்ளது.

வரலாறு

Thumb
அபியாவின் உயரதிகாரி, சொமானுடபா போகை, ஏறத்தாழ 1890–1910.

ஆப்பியா துவக்கத்தில் ஓர் சிற்றூராக இருந்தது; (1800இல் மக்கள்தொகை 304 மட்டுமே[2] தற்போது பல சிற்றூர்கள் இணைந்து விரிந்துள்ள ஆப்பியா எனப்படும் தலைநகரின் ஒருபகுதியாக இன்னமும் இந்த சிற்றூர் உள்ளது. நாட்டின் மற்றக் குடியிருப்புக்களைப் போலவே ஆப்பியா சிற்றூருக்கும் பரம்பரை மட்டாய் தலைவர்களும் ஃபா அலுபெகா (மரபு & வழக்கமான வாழ்த்துகள்) சடங்குகளையும் கொண்டுள்ளனர்.

தற்போதைய தலைநகர் ஆப்பியா 1850களில் நிறுவப்பட்டது; 1959 முதல் சமோவாவின் அலுவல்முறை தலைநகரமாக உள்ளது.[3]

மார்ச்சு 15, 1889இல் வீசிய சுறாவளியின்போது செருமனி, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் துறைமுகத்தை விட்டு அகல மறுத்த நிகழ்ச்சி வரலாற்றில் புகழ் பெற்றது. எதிர்வரும் சூறாவளியால் கபல்கள் அழியக்கூடும் என்ற நிலையிலும் முதலில் பின்வாங்கினால் தோல்வியாகக் கருதப்படும் என்று விடாப்பிடியாக நகரமறுத்து மூழ்கின. பிரித்தானிய கப்பல் கல்லியோப் மட்டுமே ஒருமணிக்கு ஒரு மைல் என்ற வேகத்தில் நகர்ந்து புயலில் இருந்து தப்பித்தது. இந்த பிடிவாதத்தால் கிட்டத்தட்ட 200 அமெரிக்க, செருமானியர்கள் உயிரிழந்தனர்; ஆறு கப்பல்கள் மூழ்கின அல்லது செப்பமிடவியலா நிலை அடைந்தன.[4]

1900களில் நாட்டின் விடுதலை இயக்கத்தின்போது தேசிய மாவ் இயக்கத்தினரின் போராட்டத்தினால் அபியாவின் சாலைகள் அமைதியான ஊர்வலங்களால் நிறைந்தது. திசம்பர் 28, 1929இல் நியூசிலாந்தின் காவல்படையால் மாவு அமைதி ஊர்வலத்தில் வந்த தலைவர் டுபுவா டமாசெசு லீலோபி கொல்லப்பட்டது "கருப்பு சனிக்கிழமை" எனப்படுகின்றது.[5]

புவியியல்

Thumb
சுற்றுப்பாதையிலிருந்து அபியாவின் காட்சி

வைசிகானோ ஆற்றின் கழிமுகத்தில் இயற்கைத் துறைமுகமாக அபியா அமைந்துள்ளது. 472 மீ உயரமுள்ள வேயா மலையின் தெற்கில் நேரடி கீழான குறுகிய கடலோரச் சமவெளியில் அபியா உள்ளது. இந்த மலையில்தான் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர். எல். இசுட்டீவன்சன் புதைக்கப்பட்டுள்ளார். வைசிகானோ ஆற்றின் இருபுறமும் இரு மலை விளிம்புகள் பரவியுள்ளன. இந்த விளிம்புகளின்மீது சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு புறமுள்ள சாலை கிராசு ஐலாந்து சாலை உபோலு தீவின் வடக்கிலுருந்து தெற்காக தெற்கு கடற்கரைவரை செல்கிறது.

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.