இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 2017, இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக ராம் நாத் கோவிந்த்தும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி சார்பாக மீரா குமாரும் போட்டியிட்டனர். இத்தேர்தல் 2017 ஆம் ஆண்டு சூலை 17 ஆம் நாள் நடைபெற்றது. 20 சூலை 2017 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதிவான 97.29% வாக்குகளில், ராம் நாத் கோவிந்த் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விரைவான உண்மைகள் வாக்களித்தோர், வேட்பாளர் ...
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2017

 2012 17 சூலை 2017 2022 
வாக்களித்தோர்97.29%[1]
  Thumb Thumb
வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் மீரா குமார்
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தே.ஜ.கூ ஐ.மு.கூ
சொந்த மாநிலம் உத்தர பிரதேசம் பீகார்

தேர்வு வாக்குகள்
702,044 367,314
வென்ற மாநிலங்கள் 21 8+
டெல்லி+
புதுவை
விழுக்காடு 65.65% 34.35%
மாற்றம் 34.95% 34.95%

Thumb
மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள் . ராம் நாத் கோவிந்த் ஆரஞ்சு, மீரா குமார் நீலம்.

முந்தைய குடியரசுத் தலைவர்

பிரணாப் முகர்ஜி
காங்கிரசு

குடியரசுத் தலைவர்

ராம் நாத் கோவிந்த்
பா.ஜ.க

மூடு

ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக 25 சூலை 2017 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.[2]

முடிவுகள்

20 சூலை 2017 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக 2017 சூலை 25 அன்று புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மத்திய மண்டபத்தில் பதவியேற்க, தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.[4]

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கூட்டணி ...
குடியரசுத் தலைவர் தேர்தல், 2017 முடிவுகள்[5][6]
வேட்பாளர் கூட்டணி வாக்குகள் வாக்குகள் மதிப்பு %
ராம் நாத் கோவிந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2,930 702,044 65.65
மீரா குமார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 1,844 367,314 34.35
செல்லத்தக்க வாக்குகள் 4,774 1,069,358 98.08
செல்லாத வாக்குகள் 77 20,942 1.92
மொத்தம் 4,851 1,090,300 100
பதிவான வாக்குகள் 4,896 1,098,903 97.29
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.