இயற்பியலுக்கான நோபல் பரிசு
From Wikipedia, the free encyclopedia
இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics, சுவீடிய: Nobelpriset i fysik), ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. மற்ற நோபெல் பரிசுகள் வேதியியல் நோபல் பரிசு, இலக்கிய நோபல் பரிசு, உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு ஆகியவை. இயற்பியலுக்கான நோபெல் பரிசை முதன்முதலாக இடாய்ச்சுலாந்து (செருமன்) நாட்டைச் சேர்ந்த வில்லெம் கோன்ராடு ரோண்ட்டகென் (Wilhelm Conrad Röntgen) என்பார் புதிர்க்கதிர்கள் அல்லது எக்ஃசு-கதிர்கள் (X-கதிர்கள்) என்பனவற்றைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றார். இப்பரிசு வழங்குவதை நோபெல் நிறுவனம் செயற்படுத்துகின்றது. இப்பரிசு இயற்பியலுக்காக வழங்கப்பெறும் மிகுபெருமை வாய்ந்த தலைசிறந்த பரிசாகக் கருதப்படுகின்றது. இப்பரிசு ஆண்டுதோறும் இசுட்டாகோமில் (Stockholm) நோபெல் இறந்த ஆண்டுநிறைவு நாளான திசம்பர் 10 அன்று வழங்கப்பெறுகின்றது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு | |
---|---|
விளக்கம் | இயற்பியலில் தலைசிறந்த கண்டுபிடிப்பு-பங்களிப்புக்கு |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | சுவீடன் வேந்திய அறிவியல்களுக்கான உயர்கல்விப்பேரவை Royal Swedish Academy of Sciences |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | http://nobelprize.org |