இளையராஜா
தமிழ் இசை அமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இளையராஜா | |
---|---|
பிறப்பு | ஞானதேசிகன் சூன் 2, 1943 (1943-06-02) (அகவை 81) பண்ணைப்புரம், தேனி, சென்னை மாகாணம் இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ராசய்யா |
பணி | திரையிசையமைப்பாளர் இசையமைப்பாளர் கவிஞர் பாடகர், மாநிலங்களவை உறுப்பினர் |
அறியப்படுவது | இசையமைப்பாளர், பாடகர், கிட்டார், கீபோட்/ ஆர்மோனியம்/ பியானோ இசைக்கலைஞர் |
பெற்றோர் | தந்தை : ராமசாமி தாயார் : சின்னத்தாய் |
வாழ்க்கைத் துணை | ஜீவா |
பிள்ளைகள் | கார்த்திகேயன், யுவன் ஷங்கர், பவதாரிணி |
வலைத்தளம் | |
ilaiyaraajalive.com |
இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.[1]
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.[2] 2022 சூலை 6 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார்.[3][4]