கிராவிட்டி (ஆங்கிலத் திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
கிராவிட்டி ஆங்கில மொழி: Gravity ஒரு முப்பரிமாண ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்தவர் அல்போன்சா குயூரான் ஆவார். இத்திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் குளூனி ரேயனாகவும் மற்றும் சாண்ட்ரா புல்லக் மாட் கோவால்ச்கியாகவும் நடித்தனர். இது விண்வெளி தொடர்பான[1][2][3][4] ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை அல்போன்சா குயூரான் அவரது மகன் சோனாச் (Jonás) உடன் இணைந்து எழுதினார். அதை யுனிவர்சல் டுடியோவிற்கு (Universal Studios) விற்பனை செய்தபின் வார்னர் பிரதர்ஸ் இத்திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் காட்டித் தயாரித்தது. இந்நிறுவனம் பல்வேறு நடிகர்களை சாண்ட்ரா புல்லக் நடித்த வேடத்தில் நடிக்க அணுகியது. ராபர்ட் டவுனி ஜூனியர் முதலில் ஜார்ஜ் குளூனி நடித்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 70 வது வெனிச் சர்வதேச திரைப்பட விழாவில் [5] கிராவிட்டி திரைப்படம் திரையிடப்பட்டது. அக்டோபர் 4 ஆம் தியதி 2013 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் இத்திரைப்படம் அதிக இடங்களில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இதில் நடித்த சாண்ரா புல்லக் மற்றும் சார்ச் க்லூனி ஆகியோரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
கிராவிட்டி | |
---|---|
இயக்கம் | அல்போன்சா குயூரான் |
தயாரிப்பு | அல்போன்சா குயூரான் மற்றும் டேவிட் கேமேன் |
கதை | அல்போன்சா குயூரான் மற்றும் சோனாச் |
இசை | டீவன் பிரைச் |
நடிப்பு | சாண்ட்ரா புல்லக் மற்றும் ஜார்ஜ் குளூனி |
ஒளிப்பதிவு | இமானுவேல் லுபிச்கி |
படத்தொகுப்பு | அல்போன்சா குயூரான் மற்றும் மார்க் சாங்கர் |
கலையகம் | எஸ்பிராண்டோ பிலிமோ மற்றும் கேடே பிலிம்ச் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | ஆகத்து 28, 2013 (2013-08-28) (Venice) அக்டோபர் 3, 2013 (AU) அக்டோபர் 4, 2013 (US) நவம்பர் 8, 2013 (UK) |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் |
ஆக்கச்செலவு | $100 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $190,323,175[1] |