கிராவ் மகா
From Wikipedia, the free encyclopedia
கிராவ் மகா (Krav Maga, எபிரேயம்: קרב מגע), ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை. இசுரேலில் வளர்ந்த இது தாக்குதல் நுட்பங்கள், மற்போர், மடக்கிப்பிடித்தல் ஆகிய நுட்பங்களைக் கொண்டது.[1] இது நடைமுறை தேவையை நோக்காகக் கொண்ட, மிகவும் பயனுள்ளதும், மூர்க்கமான பதில் தாக்குதல் முறை கொண்டதாகும். கிராவ் மகா வீதிச் சண்டை நுட்ப முறையிலிருந்து இமி லிச்டென்பெல்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1930களின் நடுப்பகுதியில் பிராத்திஸ்லாவாவிலிருந்த பாசிஸ குழுக்களிடமிருந்து யூத பகுதியை பாதுகாக்க, அவருக்குத் தெரிந்த குத்துச்சண்டை மற்றும் மற்போர் நுட்பங்களை பயிற்றுவித்தார்.[2] 1940களின் பிற்பகுதியில் இவர் இசுரேலுக்கு குடியேறி, தற்போது இசுரேலிய பாதுகாப்பு படையாக மாற்றம் பெற்றோருக்கு போர்ப் பயிற்சிகளை வழக்கினார். அக்காலத்தில் கிராவ் மகா என அழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்தினார். இது பொது மக்களுக்கு, காவற்துறைக்கு, இராணுவத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.[3]
கிராவ் மகா சின்னம் | |
நோக்கம் | கலப்பு |
---|---|
தோன்றிய நாடு | இசுரேல் செக்கோசிலோவாக்கியா (தற்போது சிலோவாக்கியா) அங்கேரி |
உருவாக்கியவர் | இமி லிச்டென்பெல்ட் |
Parenthood | கபப், பல தற்காப்புக் கலைகள் |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
அச்சுறுத்தலை செயலிழக்கச் செய்தல், ஒரே தடவையில் தாக்குதல், தற்காப்பினை மேற்கொள்ளல், மூர்க்கம் என்பன கிராவ் மகாவின் தத்துவங்களாகும்.[4] கிராவ் மகா சாதாரண, சிறப்பு இசுரேலிய பாதுகாப்பு படையால் பாவிக்கப்படுகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட அமுலாக்கல் மற்றும் புலனாய்வு பிரிவுகளான மொசாட், சின் பெட்டினால் பாவிக்கப்படுகிறது. இசுரேலுக்கு வெளியிலும் இது பலதரப்பட்ட சிறப்பு காவற்துறை, இராணுவ, புலனாய்வு படைகளான சிஐஏ, எப்பிஐ, போன்றவற்றால் பாவிக்கப்படுகிறது.[5][6] சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் வேறுபட்ட கிராவ் மகாவை கற்பிக்கின்றன.[7][8][9]