குவார்ட்சு
From Wikipedia, the free encyclopedia
குவார்ட்சு (Quartz, குவார்ட்ஸ்; ஒலிப்பு: குவார்ட்ஃசு) என்பது புவியின் மேலோட்டில் (புறணியில்), சிலிக்கேட்டு வகைப் பாறைக் கனிமமாகிய ஃபெல்டுஸ்பாருக்கு அடுத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் கனிமமாகும். இது தொடர்ச்சியான SiO4 சிலிக்கான்-ஆக்சிசன் மூலக்கூற்றால் ஆன நான்முகியாகும். இதில் இரண்டு நான்முகிகளுக்கு இடையில் ஆக்சிசன் பகிரப்பட்டிருக்கும். இதன் வாய்பாட்டை SiO4 எனக்குறிக்கலாம்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
குவார்ட்சு | |
---|---|
திபெத்திலிருந்த குவார்ட்சு படிகக் கொத்து | |
பொதுவானாவை | |
வகை | சிலிகேட்டுக் கனிமம் |
வேதி வாய்பாடு | சிலிக்கா (சிலிகான் டையாக்சைடு, SiO2) |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றதிலிருந்து கருநிறம் வரையுள்ளன |
படிக இயல்பு | 6-பக்கங்கொண்ட பட்டகம் 6-பக்கங்கொண்ட பிரமிடு வடிவத்தால் முடிக்கப்பட்டிருக்கும் (குறிப்பிட்ட), திரள்படிகம், நுண்படிகமாக்கத்தக்கது, பெரியது |
படிக அமைப்பு | α-குவார்ட்சு: முக்கோணச் சரிவகப் பட்டக வகை 3 2; β-குவார்ட்சு: அறுங்கோணப் படிகவகை 622[1] |
இரட்டைப் படிகமுறல் | பொதுவான டாஃபைன் விதி, பிரேசில் விதி, ஜப்பான் விதி (Common Dauphine law, Brazil law and Japan law) |
பிளப்பு | {0110} தெளிவற்ற |
முறிவு | சங்கு உருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கத்தக்கது |
மோவின் அளவுகோல் வலிமை | 7 – மாசு வகைகளில் குறைவானது (கனிமத்தை வரையறுத்தல்) |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை (Vitreous) – பெரிதாக இருக்கும்போது மெழுகு போன்றது |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிஊடுருவக்கூடியது ஆனால் கிட்டத்தட்ட ஒளிபுகாதது |
ஒப்படர்த்தி | 2.65; மாறத்தக்கது; மாசுவகைகளில் 2.59–2.63 |
ஒளியியல் பண்புகள் | அச்சற்றது (+) |
ஒளிவிலகல் எண் | nω = 1.543–1.545 nε = 1.552–1.554 |
இரட்டை ஒளிவிலகல் | +0.009 (B-G இடைவெளி) |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
உருகுநிலை | 1670 °C (β திரிடிமைட்டு (tridymite)) 1713 °C (β கிரித்தபலைற்று (cristobalite))[1] |
கரைதிறன் | திட்ட வெப்ப அழுத்தத்தில் (STP) கரையது; 400 °C-இல் 1 ppmநிறை, 500 °C-இல் 500 lb/in2 to 2600 ppmmass at and 1500 lb/in2[1] |
பிற சிறப்பியல்புகள் | அழுத்தமின் விளைவு, உராய்வால் ஒளிவிடும், கைரல் |
மேற்கோள்கள் | [2][3][4][5] |
குவார்ட்சில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில மதிப்பு மிகு இரத்தினக் கற்களாகும். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் குவார்ட்சின் சில வகைகள் நகைகள் செய்யவும் கல்லோவியத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
"குவார்ட்சு" எனும் சொல்லின் பிறப்பியல் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த செர்மானிய மொழியிலிருந்து தொடங்குவதாகக் கருதுகின்றனர். குவார்ட்சு (quartz) எனும் சொல் நடுவுயர் செருமானியச் சொல்லாகிய twerc என்பதன் மாற்று வடிவான querch என்பதன் சுருக்கமாக quartz என்று வந்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்[6]. இது வேறு வழியாகவும் வந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். "உறுதி", "கெட்டி" என்னும் பொருள்கள் தரும் "twardy" என்னும் மேற்கு சிலாவியச்சொல்லும், "tvrdý" என்னும் செக் மொழிச் சொல்லும், போலிசு மொழிச்சொல் ட்வார்டி (twardy) என்பதும் தொடர்புடையதாக கூறுவர்[7].