கெடா சுல்தான்
தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் அரசு / From Wikipedia, the free encyclopedia
கெடா சுல்தானகம் அல்லது கெடா சுல்தான் (மலாய் மொழி: Kesultanan Kedah; ஆங்கிலம்: Sultanate of Kedah ஜாவி: كسلطانن قدح) என்பது தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் அரசு ஆகும். முதலில் இது ஒரு சுதந்திர இராச்சியமாக இருந்தது, பின்னர் 1909-ஆம் ஆண்டில் பிரித்தானிய பாதுகாப்பு இராச்சியமாக (British Protectorate) மாறியது.
விரைவான உண்மைகள் கெடா சுல்தானகம்Sultanate of KedahKesultanan Kedah, நிலை ...
Sultanate of Kedah Kesultanan Kedah | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
330–1136 (கெடா துவா) 1136–1941 1945–1946 1948–இன்று வரையில் | |||||||||||||||||
நிலை | கெடா துவா (330–1136) சுயாட்சி சுல்தானகம் (1136–1821) இரத்தனகோசின் இராச்சியம் (1821–1909) ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு (1909–1941; 1945–1946) | ||||||||||||||||
தலைநகரம் | அலோர் ஸ்டார் | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||
• 1136–1179 | முசபர் ஷா I (first) | ||||||||||||||||
• 2017–இன்று வரையில் | சாலேவுதீன் | ||||||||||||||||
ஆலோசகர் | |||||||||||||||||
• 1909–1915; 1918–1919 | ஜார்ஜ் மெக்சுவல் | ||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | தொடக்க நவீன காலம் | ||||||||||||||||
• இசுலாமிற்கு மாற்றம் | 1136; 888 ஆண்டுகளுக்கு முன்னர் (1136) | ||||||||||||||||
• பொற்காலம் | 1735 | ||||||||||||||||
நவம்பர் 1821 | |||||||||||||||||
9 சூலை 1909 | |||||||||||||||||
16 பிப்ரவரி 1942 | |||||||||||||||||
• சிபுரி (சயாம்) | 18 அக்டோபர் 1943 | ||||||||||||||||
• சப்பான் சரணடைதல் | 14 ஆகஸ்டு 1945 | ||||||||||||||||
31 மார்ச் 1946 | |||||||||||||||||
நாணயம் | பூர்வீகத் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் நீரிணை டாலர் (1939 வரையில்) மலாயா டாலர் (1953 வரையில்) | ||||||||||||||||
| |||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா |
மூடு
மலாயா ஒன்றியத்தில் (Malayan Union) சேர்க்கப்பட்ட பிறகு அதன் முடியாட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் பின்னர், மலாயா ஒன்றியத்தின் வாரிசான மலாயா கூட்டமைப்பில் (Federation of Malaya) இணைக்கப்பட்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.
இந்த சுல்தானகத்தின் உருவாக்கம் மற்றும் அதன் உருவாக்கத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வரலாறு பற்றிய தகவல் கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் (Kedah Annals) இருந்து வருகிறது.