சம்பா இமாசலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
Thumb
சம்பாமாவட்டத்தின் இடஅமைவு இமாச்சலப் பிரதேசம்
மாநிலம்இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்சம்பா, இமாசலப் பிரதேசம்
பரப்பு6,528 km2 (2,520 sq mi)
மக்கட்தொகை393,386 (2001)
மக்கள்தொகை அடர்த்தி60.26/km2 (156.1/sq mi)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மூடு
Thumb
சம்பாவில் உள்ள லட்சுமிநாராயணன் கோயில்

பொருளாதாரம்

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[1] இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு

2011 கணக்கெடுப்பின்படி சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை 518,844.[2] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.[2] சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 80 inhabitants per square kilometre (210/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58 %.[2] சம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 73.19 %.[2]

மொழிகள்

குறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.[4]

ஆட்சி

இந்த மாவட்டம் பாங்கீ, சுராஹ், சலூனீ, பலேய், டல்ஹௌசி, படியாத், சிஹுந்தா, சம்பா, ஹோலீ, பர்மௌர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.