![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Salman_Khurshid_portrait.jpg/640px-Salman_Khurshid_portrait.jpg&w=640&q=50)
சல்மான் குர்சித்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சல்மான் குர்சித் ( சல்மான் குர்ஷித், Salman Khurshid, பிறப்பு:சனவரி 1, 1953) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி. வழக்கறிஞரும் எழுத்தாளருமான குர்சித் ஃபாரூக்காபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 2009ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குபவர். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் மே 2014 வரை பணியாற்றியவர். இதற்கு முன்னதாக இதே மக்களவைத்தொகுதியிலிருந்து பத்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போது சூன் 1991இல் வணிகத்துறை துணை அமைச்சராகவும் சன.1993-சூன் 1996 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் பொறுப்பாற்றி உள்ளார். 1981ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பிரதமரின் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக தமது அரசியல் வாழ்வைத் துவங்கினார்.
சல்மான் குர்சித் | |
---|---|
![]() சல்மான் குர்ஷித் | |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 26 மே 2014 | |
முன்னையவர் | சோ. ம. கிருசுணா |
பின்னவர் | சுஷ்மா சுவராஜ் |
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் | |
பதவியில் 28 மே 2011 – 28 அக்டோபர் 2012 | |
முன்னையவர் | வீரப்ப மொய்லி |
பின்னவர் | அஸ்வினி குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1953 (1953-01-01) (அகவை 71) அலிகார், உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | லூயி குர்ஷித் |
வாழிடம்(s) | கைம்கஞ்ச், பிதௌரா |
முன்னாள் கல்லூரி | தில்லிப் பல்கலைக்கழகம் செயிண்ட். எட்மண்ட் ஹால், ஆக்சுஃபோர்டு |
தொழில் | வழக்கறிஞர் |