சுஷ்மா சுவராஜ்
இந்திய முன்னாள் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj, 14 பெப்ரவரி 1952 - 6 ஆகத்து 2019) இந்தியாவின் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்று ஆய அமைச்சராக இருந்தார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
விரைவான உண்மைகள் சுஷ்மா சுவராஜ்Sushma Swaraj, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
சுஷ்மா சுவராஜ் Sushma Swaraj | |
---|---|
2017 இல் சுஷ்மா | |
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சல்மான் குர்சித் |
பின்னவர் | சுப்பிரமணியம் செயசங்கர் |
வெளிநாட்டு இந்திய விவகார அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 7 சனவரி 2016 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | வயலார் ரவி |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 21 திசம்பர் 2009 – 26 மே 2014 | |
முன்னையவர் | லால் கிருஷ்ண அத்வானி |
பின்னவர் | எவருமில்லை |
நாடாளுமன்ற விவகார அமைச்சர் | |
பதவியில் 29 சனவரி 2003 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | பிரமோத் மகாஜன் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 29 சனவரி 2003 – 22 மே 2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | சி. பி. தக்கூர் |
பின்னவர் | அன்புமணி ராமதாஸ் |
தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 30 செப்டம்பர் 2000 – 29 சனவரி 2003 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
பின்னவர் | இரவி சங்கர் பிரசாத் |
5-வது தில்லி முதல்வர் | |
பதவியில் 13 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998 | |
துணைநிலை ஆளுநர் | விஜய் கபூர் |
முன்னையவர் | சாகிப் சிங் வர்மா |
பின்னவர் | சீலா தீக்சித் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2009 – 24 மே 2019 | |
முன்னையவர் | ரம்பால் சிங் |
பின்னவர் | ராமகாந்த் பர்காவா |
தொகுதி | விதிசா |
பதவியில் 7 மே 1996 – 3 அக்டோபர் 1999 | |
முன்னையவர் | மதன் லால் குரானா |
பின்னவர் | விஜய்குமார் மல்கோத்திரா |
தொகுதி | தெற்கு தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுஷ்மா சர்மா (1952-02-14)14 பெப்ரவரி 1952 [1] அம்பாலா, பஞ்சாப், இந்தியா (இன்றைய அரியானாவில்) |
இறப்பு | 6 ஆகத்து 2019(2019-08-06) (அகவை 67)[2] புது தில்லி, தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுவராஜ் கௌசல் (தி. 1975–2019) |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் கல்லூரி | சநாதன தர்மக் கல்லூரி பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் |
தொழில் | |
மூடு
இவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 23 ஆம் திகதி 3 மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார்.