சிலேசிய மொழி
From Wikipedia, the free encyclopedia
சிலேசிய மொழி (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000[1] மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.
விரைவான உண்மைகள் சிலேசிய மொழி, நாடு(கள்) ...
சிலேசிய மொழி | |
---|---|
Ślůnsko godka | |
நாடு(கள்) | போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா |
பிராந்தியம் | மேல் சிலேசியா / சிலேசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | > 1 250 000[மேற்கோள் தேவை] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | szl |
மூடு
சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.