சைபர்ஜெயா
மலேசியா, சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரம் / From Wikipedia, the free encyclopedia
சைபர்ஜெயா (மலாய்:Cyberjaya; ஆங்கிலம்:Cyberjaya) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஓர் உயர் அறிவியல் தொழில்நுட்ப நகரமாகும். மலேசியாவின் மலேசிய பல்லூடகப் பெருவழி (Multimedia Super Corridor) திட்டத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்கிறது.
விரைவான உண்மைகள் சைபர்ஜெயா, நாடு ...
சைபர்ஜெயா | |
---|---|
மின்வெளி வளாகம் Silicon Valley of Malaysia | |
Cyberjaya | |
ஆள்கூறுகள்: 2°55′21″N 101°39′18″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
உருவாக்கம் | 17 மே 1997 |
பரப்பளவு | |
• மொத்தம் | 3.2 km2 (1.2 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,44,000 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாட்டில் இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 63000 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-83, +60-86, +60-88 |
இணையதளம் | cyberjayamalaysia.com.my mpsepang.gov.my |
மூடு
இந்தத் தொழில்நுட்ப நகரம், மலேசிய அரசாங்கத்தின் நிர்வாக நகரமான புத்ராஜெயாவுடன், சமகாலத்தில் இணைந்து உருவாக்கப்பட்டது. இங்கு பல பன்னாட்டு நிறுவனங்களும்; தரவு மையங்களும் தங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்துள்ளன.[1]
மலேசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley of Malaysia) என்று அழைக்கப்படும் இந்த நகரத்தின் கட்டுமானம், 1997 மே 17-ஆம் தேதி, மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கப்பட்டது. [2]