ஜொகூர் பாரு மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
(சொகூர் பாரு எனும் பெயரில் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு நகரம் என இரு இடங்கள் உள்ளன.)
விரைவான உண்மைகள் சொகூர் பாரு மாவட்டம்Daerah Johor Bahru, தொகுதி ...
சொகூர் பாரு மாவட்டம் Daerah Johor Bahru | |
---|---|
சொகூர் பாரு மாவட்டம் அமைவிடம் சொகூர் | |
ஆள்கூறுகள்: 1°32′N 103°43′E | |
தொகுதி | சொகூர் பாரு |
உள்ளூராட்சி | இசுகந்தார் புத்ரி மாநகராட்சி மன்றம் (வடக்கு மேற்கு சொகூர் பாரு) சொகூர் பாரு மாநகராட்சி மன்றம் (சொகூர் பாரு மாநகர் மையம்) பாசீர் கூடாங் மாநகராட்சி மன்றம் (கிழக்கு சொகூர் பாரு) |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ஆசி அப்துல் ரகுமான் சாலே Haji Abdul Rahman bin Salleh |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,063.97 km2 (410.80 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 12,65,545 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
அஞ்சல் குறியீடுகள் | 79xxx - 81xxx |
Area code(s) | +6-07-2, +6-07-3, +6-07-5தொலைபேசி குறியீடு |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
மூடு
சொகூர் பாரு மாவட்டம், (மலாய்: Daerah Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru District; சீனம்: 新山县; சாவி: جوهر بهرو) என்பது மலேசியா, சொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம் சொகூர் மாநிலத்தில் ஆகத் தென்முனையில் உள்ளது.
சொகூர் பாரு மாவட்டத்தின் தலைநகரம் சொகூர் பாரு நகரம்; நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே சொகூர் நீரிணை.
இதன் நகர்ப்புற மையங்களாக சொகூர் பாரு; இசுகந்தர் புத்திரி மற்றும் பாசீர் கூடாங் நகரங்கள் அமைந்து உள்ளன. இதன் மாநகர் மன்றம் சொகூர் பாரு நகரத்தில் உள்ளது.