ஜோஸ் வேடன்
From Wikipedia, the free encyclopedia
ஜோஸ் வேடன் (Joss Whedon) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் மியூட்டண்ட் எனிமி புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பெல்வெதர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைந்து நிறுவினார் ஆவார். மேலும் பஃபி தி வாம்பயர் ஸ்லேயர் (1997-2003),[2] ஏஞ்சல் (1999-2004),[3] பையர்பிலே (2002),[4] டால்ஹவுஸ் (2009-2010), ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியுள்ளார். இவர் பல படங்களைத் தயாரித்து, இயக்கி மற்றும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் வேடன் | |
---|---|
பிறப்பு | ஜோசப் ஹில் வேடன் சூன் 23, 1964 (1964-06-23) (அகவை 59) நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெஸ்லியன் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
பாணி | |
பெற்றோர் | டாம் வேடன் ஆன் லீ ஸ்டேர்ன்ஸ் |
வாழ்க்கைத் துணை | கை கோல் (தி. 1995; ம.மு. 2016) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | ஜான் வேடன் (தாத்தா) சாமுவேல் வேடன் (சகோதரர்) மத்தேயு தாமஸ் வேடன் (சகோதரர்) ஜெட் வேடன் (சகோதரர்) சாக் வேடன் (சகோதரர்) |
இவர் பிக்சார் நிறுவனத்தின் இயங்குபடமான டாய் ஸ்டோரி (1995) என்ற படத்தை இணைந்து எழுதினார் இதற்காக அவர் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5][6][7] மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் திரைப்படங்களான தி அவேஞ்சர்ஸ் (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) ஆகியவற்றை எழுதி இயக்கியுள்ளார், மேலும் டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்ச மீநாயகன் படமான ஜஸ்டிஸ் லீக்[8] (2017) படத்திற்கான வசனத்தை இணைந்து எழுதினார். சாக் சினைடருக்கு பதிலாக ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்தின் மறு படப்பிடிப்புகளில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.