டெல் பராக்
From Wikipedia, the free encyclopedia
நகர் அல்லது டெல் பராக் (Tell Brak - Nagar, Nawar) பண்டைய அன்மை கிழக்கின் தற்கால சிரியாவில் உள்ள அழிந்து போன பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய நகர் நகரம் 130 ஹெக்டேர் பரப்புடன், 40 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச் சுவர்களுடன் விளங்கியது.[2] [3] [4]
நகர் அல்லது நவார் டெல் பிராக் Tell Brak | |
---|---|
நகர் இராச்சியத்தின் தொல்லியல் களம் | |
மாற்றுப் பெயர் | நகர், நவார் |
இருப்பிடம் | காபூர் கிராமம், அல்-அக்சா ஆளுரநகம், சிரியா |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°40′03.42″N 41°03′31.12″E |
வகை | Settlement |
பரப்பளவு | 40 எக்டேர்கள் (99 ஏக்கர்கள்).[1] |
உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி).[1] |
வரலாறு | |
காலம் | கற்காலம், வெண்கலக் காலம், பண்டைய அண்மை கிழக்கு |
கலாச்சாரம் | ஹலாப் பண்பாடு, உபைது பண்பாடு, உரூக் பண்பாடு, கிஷ் பண்பாடு,ஹுரியப் பண்பாடு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1937–1938, 1976–2011 |
அகழாய்வாளர் | மாக்ஸ் மல்லோவன், டேவிட் ஓட்ஸ் மற்றும் ஜோன் ஓட்ஸ் |
பொது அனுமதி | ஆம் |
இணையத்தளம் | tellbrak.mcdonald.cam.ac.uk |
நகர் அல்லது நவார் இராச்சியம் | |
---|---|
கிமு 2600–கிமு 2300 | |
தலைநகரம் | நகர் |
பேசப்படும் மொழிகள் | எப்லா மொழி |
சமயம் | பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் |
• தொடக்கம் | கிமு 2600 |
• முடிவு | கிமு 2300 |
தற்போதைய பகுதிகள் | சிரியா |
சிதைந்து போன நகர் இராச்சியத்தின் தொல்லியல் களங்கள், தற்கால சிரியா நாட்டில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில், அல் அசகா ஆளுநரகத்தில், காபூர் கிராமத்தில் உள்ளது.
இந்நகரத்தின் உண்மையான பெயர் அறியப்படவில்லை. [5] இதன் தற்போதைய பெயர் டெல் பராக் ஆகும். [6]கிமு மூன்றாவது ஆயிரமாவது ஆண்டின், இரண்டாம் நடுப்பகுதியில் இந்நகரத்தின் பெயர் நகர் என்றும், பின்னர் நவார் என்றும் அறியப்படுகிறது. செமிடிக் மொழியில் நகர் என்பதற்கு வேளாண்மைக்கு ஏற்ற இடம் என்று பொருள் ஆகும்.[7] பண்டைய நகர் அல்லது நவார் இராச்சியத்தின் சிதிலங்கள் காணப்படும் இடத்தை டெல் பராக் என்பர்.