டோனால்ட் டிரம்ப்
அமெரிக்க அரசியல்வாதி. / From Wikipedia, the free encyclopedia
டோனால்ட் ஜான் டிரம்ப் (Donald John Trump, பிறப்பு: சூன் 14, 1946) அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார். குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் இலரி கிளின்டனை 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அரசுத் தலைவர் இவராவார்.
டோனால்ட் டிரம்ப் Donald Trump | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 45வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் சனவரி 20, 2017 – சனவரி 20, 2021 | |
Vice President | மைக் பென்சு |
முன்னையவர் | பராக் ஒபாமா |
பின்னவர் | ஜோ பைடன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 14, 1946 (1946-06-14) (அகவை 77) நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (1987–1999, 2009–2011, 2012–இன்று) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்களாட்சிக் கட்சி (1987 இற்கு முன்னர், 2001–2009) சீர்திருத்தக் கட்சி (1999–2001) சுயேட்சை (2011–2012)[1][2] |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | போர்டாம் பல்கலைக்கழகம் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (இளங்கலை) |
கையெழுத்து | |
இவர் திரம்பு குழுமத்தின் தலைவராக உள்ளார். இவருடைய தொழில் வாழ்வில் இவர் உலகம் முழுவதும் அலுவலகக் கட்டடங்கள், சூதாட்ட விடுதிகள், தங்கும் விடுதிகள், கோல்ப் விளையாட்டு திடல்களை அமைத்துள்ளார்.
திரம்ப் தனது 2020 மறுதேர்தல் முயற்சியில் உதவ வெளிநாட்டுத் தலையீட்டைக் கோரியதாகவும், பின்னர் இதற்கான விசாரணையைத் தடுத்ததாகவும் 2019 இல் கீழவையில் இடம்பெற்ற விசாரணையில் கண்டறியப்பட்டது. திரம்பின் அரசியல் போட்டியாளர்கள் மீதான விசாரணைகளைப் பகிரங்கமாக அறிவிக்க உக்ரைனுக்கு செல்வாக்கு செலுத்துவதற்காக இராணுவ உதவிகளை திரம்ப் தடுத்து நிறுத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.[3] 2019 திசம்பர் 13 அன்று, கீழவையின் நடுவர் குழு அதிகார வன்முறை, மற்றும் காங்கிரசின் விசாரணைத் தடை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஒப்புதல் அளித்தது.[4] இதன்படி, 2019 திசம்பர் 18 அன்று, கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரம்ப் பிரதிநிதிகள் சபையால் குற்றஞ்சாட்டப்பட்ட வரலாற்றில் மூன்றாவது அமெரிக்க அரசுத்தலைவர் ஆவார்.[5] அமெரிக்க மேலவையில் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வழக்கில் 2020 பெப்ரவரி 5 இல் திரம்பு இரு குற்றச்சாட்டுகளிலும் இருந்து குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.[6]