![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/WFB_2016.jpg/640px-WFB_2016.jpg&w=640&q=50)
த வேர்ல்டு ஃபக்ட்புக்
From Wikipedia, the free encyclopedia
த வேர்ல்டு ஃபக்ட்புக் (The World Factbook, ஐ.அஸ்.அஸ்.என். 1553-8133) அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.[1] இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப தகவல் சேவை(அமெரிக்க) மற்றும் அரசு அச்சு அலுவலகத்திலும்(அமெரிக்க) கிடைக்கிறது. மேலும் ஸ்கைஹார்ஸ் போன்ற இதர பதிப்பக நிறுவனங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் எளிதில் தரவிறக்கிப் பயன்படுத்த இணையத்திலும் இதன் மென்பிரதி கிடைக்கிறது. இப்புத்தகம் பொதுவாக மக்கள் வகைப்பாடு, புவியியல், தகவல்தொடர்பியல், அரசாங்கம், பொருளியல், மற்றும் அமெரிக்கா உட்பட இராணுவம் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசின் தேவைகளுக்காக தகுந்த முறையில் இந்த தகவல்களைத் திரட்டப்பட்டு காப்புரிமையின்றி பொதுக் களத்தில் வைக்கப்படுகிறது. தற்போது இரண்டு வாரத்திற்குவொரு முறை இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/Wfb_webby.png/640px-Wfb_webby.png)
![]() த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் புத்தக அட்டை (2011 பதிப்பு). | |
நூலாசிரியர் | நடுவண் ஒற்று முகமை |
---|---|
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | வரலாறு |
வகை | நாடுகள் பற்றிய தொகுப்பு |
வெளியீட்டாளர் | இயக்குநர் |
ISBN | பார்க்க ஐ.எஸ்.பி.என் பட்டியல் |