நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
சங்ககால பாண்டிய மன்னன் / From Wikipedia, the free encyclopedia
நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.
மேலதிகத் தகவல்கள் பாண்டிய மன்னர்களின் பட்டியல் ...
மூடு