தாளம் (இசைக்கருவி)
From Wikipedia, the free encyclopedia
தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன. இது கைக்கு அடக்கமான வட்ட வடிவிலான வெண்கலத்தால் ஆன இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர். பல்வேறு இசைக்கருவிகள் சேர்ந்து வாசிக்கப்படும் போது இசையின் கால அளவுகளை நெறிப்படுத்தும் கருவி தாளம் ஆகும்.[1][2]