துரோலாக்
துரோலாக் (Trolak) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட் / From Wikipedia, the free encyclopedia
துரோலாக் (Trolak) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், பத்தாங் பாடாங் மாவட்டத்தில், சுங்கை துணை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. பழைய நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்தைச் சென்று அடையலாம்.[1]
விரைவான உண்மைகள் துரோலாக்Trolak பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 3°53′N 101°23′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1890 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdtapah.gov.my/ |
மூடு
துரோலாக் நகரத்திற்கு வடக்கே சுங்கை, பீக்காம் நகரங்கள். தெற்கே சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். ஈப்போ மாநகரத்தில் இருந்து 97 கி.மீ.; தஞ்சோங் மாலிம் நகரத்தில் இருந்து 55 கி.மீ.; தொலைவில் துரோலாக் நகரம் அமைந்து உள்ளது.
மலாய் மொழியில் பெக்கான் துரோலாக் என்று அழைக்கிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றியுள்ள இடங்களைத் துரோலாக் கிராமம் என்றும் அழைக்கிறார்கள்.