தென்முனைப் பெருங்கடல்
பெருங்கடல் / From Wikipedia, the free encyclopedia
தென்முனைப் பெருங்கடல் (Southern Ocean), அல்லது அண்டார்ட்டிக் பெருங்கடல் (Antarctic Ocean)[1] அல்லது the தென் பெருங்கடல் (Austral Ocean)[2][note 4] என்பது உலகப் பெருங்கடல்களுக்கு மிகவும் தெற்காக அமைந்த நீர்நிலையைக் குறிக்கும். இது புவியின் தென்முனையில் அண்டார்ட்டிகாவை 360 பாகைகளும் சூழ்ந்தபடி 60° தெ அகலாங்குக்கும் தெற்கில் அமைந்துள்ளது.[6] இது ஐந்து முதன்மையான பெருங்கடல்களில் நான்காவது பெருங்கடலாகும்.: மேலும் இது அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றைவிடச் சிறியதாகும். ஆனால், இது ஆர்க்டிக் பெருங்கடலை விட பெரியதாகும்.[7] இந்தப் பெருங்கடல் வட்டாரத்தில் தான் வடக்குமுகமாகப் பாயும் அண்டார்ட்டிகாவின் தண் நீரோட்டமும் வெத்துவெதுப்பான உள் அண்டார்ட்டிக் நீரோட்டமும் சந்தித்துக் கலக்கின்றன.
.
இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 அடி). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'தெ, 024°மே. என்னும் ஆயங்களில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது.
அண்டார்ட்டிக்கின் கண்டத் திட்டு வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 அடி) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 அடி) ஆகும். தனது தென்முனைப் பயணத்தின் வழியாக 1770 களில், ஜேம்சு குக் புவிக்கோள தென் அகலாங்குகளில் நீர்நிலை சூழ்ந்திருப்பதை நிறுவினார். அதில் இருந்தே புவிப்பரப்பியலாளர்கள் தென்முனைப் பெருங்கடலின் வடக்கு வரம்பை ஏன், அந்நீர்நிலையின் நிலவலையே ஏற்கவில்லை. மாறாக, இந்த நீர்ப்பகுதியை இவர்கள் அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் பகுதியாகவே கருதிவந்தனர். இந்தக் கண்ணோட்டமே பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் கொள்கையாக இதுவரை நிலவுகிறது. ஏனெனில், 2000 ஆம் ஆண்டின் 60 ஆம் அகலாங்குக்குத் தெற்கே உள்ளதாக தென்முனைப் பெருங்கடலை உள்ளடக்கிய வரையறுப்புகள் வேறு காரணங்களால் இன்னமும் ஏற்கப்படாமலேயே உள்ளது. பிறர் பருவந்தோறும் மாறும் அண்டார்ட்டிகா குவிவையே இயற்கையான வரம்பெல்லையாகக் கொள்கின்றனர்.[8]