தேவபூமி துவாரகை மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தேவபூமி துவாரகை மாவட்டம், (Devbhumi Dwarka district) குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியான, சௌராஷ்டிர தீபகற்பத்தில், கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் காம்பாலியம் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் துவாரகாதீசர் கோயில் மற்றும் பேட் துவாரகை அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் தேவபூமி துவாரகை மாவட்டம் દેવભૂમિ દ્વારકા, நாடு ...
தேவபூமி துவாரகை மாவட்டம்
દેવભૂમિ દ્વારકા | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவிய நாள் | 15 அகஸ்டு 2013 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இணையதளம் | https://devbhumidwarka.nic.in |
மூடு
ஜாம்நகர் மாவட்டத்திலிருந்து துவாரகை போன்ற சில பகுதிகளை பிரித்து, 67-வது இந்திய சுதந்திர தினமான 15-08-2013-இல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏழு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது குசராத்து மாநிலம் 33 மாவட்டங்களுடன் உள்ளது[1][2]