![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/f/fc/Thor_poster.jpg/640px-Thor_poster.jpg&w=640&q=50)
தோர் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
தோர் (ஆங்கில மொழி: Thor) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காவது படம் ஆகும்.
தோர் | |
---|---|
![]() திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | கென்னத் பிரனா |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | தோர் படைத்தவர் ஸ்டான் லீ ஜாக் கிர்பி லாரி லிபர் |
திரைக்கதை | ஆஷ்லே மில்லர் சாக் ஸ்டென்ட்ஸ் டான் பெய்ன் |
இசை | பேட்ரிக் டயல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஹரிஸ் சாம்பார்லூகோஸ் |
படத்தொகுப்பு | பால் ரூபெல் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 17, 2011 (சிட்னி) மே 6, 2011 (அமெரிக்கா) |
ஓட்டம் | 114 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $449,326,618[3] |
கேவின் பிகே என்பவர் தயாரிக்கும் இத் திரைப்படத்தை கென்னத் பிரனா என்பவர் இயக்க, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், நடாலீ போர்ட்மேன், டாம் ஹிடில்ஸ்டன், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், கோல்ம் ஃபியோர், ரே ஸ்டீவன்சன், இட்ரிசு எல்பா, கேட் டென்னிங்ஸ், ரெனே ருஸ்ஸோ மற்றும் அந்தோணி ஹோப்கின்ஸ் ஆகியோர் நடித்தள்ளனர்.
தோர் என்று படம் 17 ஏப்ரல் 2011 இல் சிட்னியிலும் 6 மே 2011 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முதலாம் கட்டத்தின் நான்காவது திரைப்படமாக வெளியானது. இப் படம் உலகளவில் 449 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இதன் தொடர்சியாக தோர்: த டார்க் வேர்ல்டு (2013), தோர்: ரக்னராக் (2017) மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்கள் வெளியானது.