நகர மண்டபம், பினாங்கு
மலேசியாவின் பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன் நகரின் உள்ளூர் அரசாங்க தலைமையகம் / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு மாநகர மண்டபம் (ஆங்கிலம்: Penang City Hall; மலாய்: Dewan Bandaraya Pulau Pinang) என்பது மலேசியா, பினாங்கு ஜார்ஜ் டவுன் நகரில் உள்ள உள்ளாட்சி அரசாங்க தலைமையகம் (Local Government Headquarters) ஆகும்.
விரைவான உண்மைகள் பினாங்கு மாநகர மண்டபம்Penang City Hall Dewan Bandaraya Pulau Pinang, முந்திய பெயர்கள் ...
பினாங்கு மாநகர மண்டபம் Penang City Hall Dewan Bandaraya Pulau Pinang | |
---|---|
முந்திய பெயர்கள் | நகராட்சி அலுவலகங்கள் |
பொதுவான தகவல்கள் | |
வகை | பினாங்கு நகர மண்டபம் |
கட்டிடக்கலை பாணி | Edwardian Baroque; Palladian Architecture; |
முகவரி | எசுபிளனேட் சாலை 10200 ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா |
நகரம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 5.421968°N 100.341555°E / 5.421968; 100.341555 |
தற்போதைய குடியிருப்பாளர் | பினாங்கு தீவு மாநகராட்சி |
நிறைவுற்றது | 1903; 121 ஆண்டுகளுக்கு முன்னர் (1903) |
செலவு | $ 35,000 |
உரிமையாளர் | பினாங்கு தீவு மாநகராட்சி |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 2 |
வகை | பண்பாடு |
வரன்முறை | ii, iii, iv |
தெரியப்பட்டது | 2008 (32-ஆவது) |
உசாவு எண் | 1223 |
Region | ஆசியா-பசிபிக் |
மூடு
தற்சமயம் பினாங்கு தீவு மாநகராட்சியின் (Penang Island City Council) தலைமையகமாகச் செயல்படுகிறது. அதற்கு முன்னர் ஜார்ஜ் டவுன் நகராட்சியின் (George Town City Council) தலைமையகமாகவும் இருந்தது.[1]
இந்த பினாங்கு மாநகர மண்டபம், 1903-ஆம் ஆண்டில், ஊராட்சி அலுவலகமாக (Municipal Office) பிரித்தானியர்களால் கட்டப்பட்டது. இப்போதைய பினாங்கு மாநகர மண்டபத்திற்கு எதிர்ப்புறமாய் பழைய ஊராட்சி அலுவலகம் (Town Hall) இருந்தது.
அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால் இந்த பினாங்கு மாநகர மண்டபம் $ 100,000 (Straits Dollar) செலவில் புதிதாய்க் கட்டப்பட்டது.[1][2]