நல்லூர் பிரதேச சபை
From Wikipedia, the free encyclopedia
நல்லூர் பிரதேச சபை (Nallur Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள யாழ்ப்பாண மாநகரசபைக்குள் அடங்கும் பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் வடக்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு, சாவகச்சேரி ஆகிய பிரதேச சபைகளும், நீரேரியும்; தெற்கில் யாழ்ப்பாண மாநகரசபை, நீரேரி என்பனவும்; மேற்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 12 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
விரைவான உண்மைகள் நல்லூர் பிரதேச சபை Nallur Divisional Council, வகை ...
நல்லூர் பிரதேச சபை Nallur Divisional Council | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி சபை |
தலைமை | |
தலைவர் | |
பிரதித் தலைவர் | |
உறுப்பினர்கள் | 12 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2011 |
வலைத்தளம் | |
nallurps.org |
மூடு