நாட்டு மாடு
From Wikipedia, the free encyclopedia
Euteleostomi
நாட்டு மாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Bovinae |
பேரினம்: | Bos |
இனம்: | B. indicus |
இருசொற் பெயரீடு | |
Bos indicus லின்னேயஸ், 1758[1] | |
வேறு பெயர்கள் | |
|
நாட்டுமாடு (ஆங்கில மொழி: zebu (/ˈziːb(j)uː, ˈzeɪbuː/; Bos primigenius indicus or Bos indicus or Bos taurus indicus sometimes known as indicine cattle or humped cattle ) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும். நாட்டு மாடுகளும் அதன் கலப்பின மாடுகள் மிகுந்த வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளதால், வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. தூய நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் போன்றவை இழுவை விலங்கு, வண்டி மாடுகள் போன்ற பணி விலங்காகவும், பால் மாடுகளாகவும், இறைச்சித் தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணமானது எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகளில் சிற்றுரு (மினியேச்சர்) மாடுகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை படியெடுப்பு முறையில் உருவாக்கியது.[2]