பச்சை பூக்கோசு
From Wikipedia, the free encyclopedia
பச்சை பூக்கோசு (broccoli) என்பது Brassicaceae (or Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, தலைப்பகுதி எனக் கூறப்படும் பெரிய பூவாலான உணவுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியைக் கொண்ட ஒரு தாவரம் ஆகும். புரோக்கோலி என்ற இந்தப் பெயர், முட்டைக்கோசின் மேலேயுள்ள பூக்கும் பகுதியைக் குறிப்பிடும் இத்தாலியச் சொல்லான ப்ரோக்கோலோ (broccolo) வின் பன்மைச் சொல்லில் இருந்து வந்தது[3].
பச்சை பூக்கோசு Broccoli | |
---|---|
இனம் | Brassica oleracea |
பயிரிடும்வகைப் பிரிவு | Italica group (இத்தாலிக்கா பிரிவு) |
தோற்றம் | இத்தாலியில் இருந்து (2,000 ஆண்டுகளுக்கு முன்னர்)[1][2] |
இவை பிராசிகா ஒலெரசியா இனத்தின் உட்பிரிவாக கல்டிவர் இனமாக வகைப்படுத்தப்படுகின்றன. ப்ரோக்கோலி அமோகமான மரவடிவம், மலரின் தலைப்பகுதிகள், பொதுவாக பச்சை நிறம், அடர்த்தியான, உண்ணத்தக்க, தடித்த தண்டில் இருந்து மரம்-போன்ற தோற்றத்தில் சீரான கிளைபரப்பிய குருத்துக்கள் போன்ற பண்புகளைப் பெற்றுள்ளன. பெருந்திரளான மலரின் தலைப்பகுதிகள் ஏராளமான இலைகளால் சூழப்பட்டிருக்கும். ப்ரோக்கோலி, காலிபிளவருடன் மிகவும் நெருங்கிய அளவில் ஒத்திருக்கும். அது இதே பொதுவகையில் மாறுபட்ட கல்டிவர் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் ப்ரோக்கோலி பச்சை நிறத்தில் இருக்கும். காலிபிளவர் வழக்கமான வெள்ளை வகையுடன் ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கலாம்.