பாடாங் பெசார்
பாடாங் பெசார் (Padang Besar) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
பாடாங் பெசார் (மலாய்: Padang Besar P.B.; ஆங்கிலம்: Padang Besar); என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு.
பாடாங் பெசார் | |
---|---|
Padang Besar | |
பெர்லிஸ் | |
அடைபெயர்(கள்): கடைவலச் சொர்க்கம் | |
ஆள்கூறுகள்: 6°39′38″N 100°19′18″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
உருவாக்கம் | 1820 |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | காவ் ஆக் கோங் (Khaw Hock Kong) |
ஏற்றம் | 27 m (89 ft) |
உயர் புள்ளி | 810.2 m (2,658.1 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | ஏறக்குறைய 10,000 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 02100 |
மலேசியத் தொலைபேசி எண் | +604 |
கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[1]
இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[2]