பிளாக் ஸ்வான் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
பிளாக் ஸ்வான் (Black Swan) என்பது 2010 ஆம் ஆண்டைய அமெரிக்க உளவியல் திகில் திரைப்படம் ஆகும்.[3][4] ஹின்ஸ் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு மார்க் ஹேமேன், ஜான் மெக்லாக்லின், மற்றும் ஆண்ட்ரஸ் ஹென்ஸ் ஆகியோர் திரைக்கதையை எழுத, படத்தை டேரன் அரோனாப்ஸ்கி. இயக்கியுள்ளார். இப்படத்தில் நேடலி போர்ட்மன், வின்சென்ட் காஸெல், பார்பரா ஹெர்ஷே, வினோனா ரைடர், மிலா குனிஸ், ஆகியோர் நடித்துள்ளனர். கதையானது நியூயார்க் நகரத்தை அடிப்படையாக செயல்படும் பாலே நடன நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியின் ஸ்வான் லேக் என்னும் நாடகத்தை நடத்துவதைப் பற்றியதாக அமைந்துள்ளது.
பிளாக் ஸ்வான்Black Swan | |
---|---|
இயக்கம் | டேரன் அரோனாப்ஸ்கி |
திரைக்கதை |
|
இசை | கிளின்ட் மான்சல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு லிபடிக் |
படத்தொகுப்பு | ஆண்ட்ரூ வைஸ் ப்ளூம் |
விநியோகம் | பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 1, 2010 (2010-09-01) (வெனிஸ்) திசம்பர் 3, 2010 (United States) |
ஓட்டம் | 108 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $13 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $329.4 மில்லியன் |
இப்படம் பொதுவாக ஒரு உளவியல் திகில் படமாக விவரிக்கப்படுகிறது. படத்தின் கதாநாயகி படத்தில் இடம்பெறும் நாடகத்தில் பிளாக் ஸ்வான் என்ற பாத்திரத்தில், நடிக்கத் தகுந்த கலை நுணுக்கத்தை அடைவதற்கு உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் சவால்களை சந்தித்து, சிறப்பாக நடித்து முடிப்பதைப் பற்றியதாக இக்கதை அமைந்துள்ளது.[5]
இந்தத் திரைப்படம் 2010 செப்டம்பர் 1 அன்று 67 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரைப்படமாக திரையிடப்பட்டது. பின்னர் இது அமெரிக்காவில் 2010 திசம்பர் 3 முதல் வரம்பிற்குட்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர் திசம்பர் 17 அன்று பரவலாக பல அரங்குகளில் வெளியிடப்பட்டது. படமானது போர்ட்மேனின் நடிப்பு மற்றும் அரோனோஃப்ஸ்கியின் இயக்கத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படம் உலகளவில் $329 மில்லியனை ஈட்டியது. இந்தத் திரைப்படமானது சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஐந்து அகாடமி விருது போன்ற பரிந்துரைகளைப் பெற்றது; இந்த படத்தில் நடித்த போர்ட்மன் சிறந்த நடிகை விருதை வென்றார். இது அல்லாது மேலும் பல பிற விருதுகளைப் பெற்றார்.