புக்கிட் காயூ ஈத்தாம்
கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் / From Wikipedia, the free encyclopedia
புக்கிட் காயூ ஈத்தாம் (மலாய்: Bukit Kayu Hitam; ஆங்கிலம்: Bukit Kayu Hitam); சீனம்: 黑木山); என்பது மலேசியா, கெடா, குபாங் பாசு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் புக்கிட் காயூ ஈத்தாம், நாடு ...
புக்கிட் காயூ ஈத்தாம் | |
---|---|
Bukit Kayu Hitam | |
ஆள்கூறுகள்: 6°30′N 100°25′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | குபாங் பாசு |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 06050 |
மூடு
இந்த நகரம் மலேசியா-தாய்லாந்து எல்லை (Malaysia–Thailand border) அருகே அமைந்து உள்ளது. மலேசியா தாய்லாந்து நாடுகளுக்கு இடையே எல்லைக் கடக்கும் பரபரப்பான சாலை இந்த நகரில் உள்ளது.[1]
மலேசியா-தாய்லாந்து எல்லையில் பான் டானோக் கிராமம் (Ban Danok) உள்ளது. அங்கு தான் தாய்லாந்து நாட்டிற்கான சடாவோ (Sadao) சோதனைச் சாவடியும் அமைந்துள்ளது.