பெரிய வியாழன்
From Wikipedia, the free encyclopedia
பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை (Holy Thursday - Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் (Holy Week) என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும்.[1] நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக் கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர்.[2] இவ்விரவு கடைசித் தடவையாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் அவர்களுக்குக் கூறினார். இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும். இதற்கு முந்திய நாள் புனித புதன், இதற்கு அடுத்த நாள் புனித வெள்ளி ஆகும்.[3]
விரைவான உண்மைகள் பெரிய வியாழன், பிற பெயர்(கள்) ...
பெரிய வியாழன் | |
---|---|
இயேசு இறுதி இரவுணவு அருந்துகிறார்; திருப்பட ஆக்குநர்: சைமன் உஷாக்கோவ்; ஆண்டு: 1685. | |
பிற பெயர்(கள்) | புனித வியாழன் |
கடைபிடிப்போர் | கிறித்தவர்கள் |
வகை | கிறித்தவம் / பொது விடுமுறை |
முக்கியத்துவம் | பாதங்களைக் கழுவும் சடங்கு; நற்கருணை (திருவிருந்து) |
அனுசரிப்புகள் | மாலைச் சிறப்புத் திருப்பலி; நற்கருணை ஆராதனை |
நாள் | Easter − 3 days |
2023 இல் நாள் | ஏப்பிரல் 6 (மேற்கு) ஏப்பிரல் 13 (கிழக்கு) |
2024 இல் நாள் | மார்ச்சு 28 (மேற்கு) மே 2 (கிழக்கு) |
2025 இல் நாள் | ஏப்பிரல் 17 (மேற்கு) ஏப்பிரல் 17 (கிழக்கு) |
தொடர்புடையன | புனித வாரம் |
மூடு