பெஸ்லான் (ஆங்கிலம்:Beslan) நகரம் ரஷ்யா நாட்டின் வட ஒசேதியா-அலனியா பகுதியில் உள்ள பிரவொபெரெழினி (Pravoberezhny) மாவட்டத்தின் நிர்வாக மையம் ஆகும். 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 32,469 பேரும்[1] 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 35550 பேரும், 2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 36728 பேரும்[2] இங்கு மக்கட்தொகையாகும். மக்கள் தொகை கணக்கின்படி மொஸ்டொக் குடியரசில் இந்நகர் 3 வது பெரிய நகரம் ஆகும்.

Thumb
பெஸ்லான் புகை வண்டி நிலையம்

புவியியல்

பெஸ்லான் நகர் இங்குஷ்திய (Ingushetia) குடியரசின் மிக அருகிலும், விளாடிகவ்கா (vladikavkaz) குடியரசிலிருந்து 18 கிமீ தூரத்திலும்,கபார்டினொ (kabardino) நகருக்கு 97 கிமீ தூரத்திலும், நால்சிக் (Nalchik) குடியரசிலிருந்து 60 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

வரலாறு

இந்நகரத்தில் 1847 ல் ஒசேத்தியா பகுதி மக்களின் குடியேற்றத்தில் நகர வளர்ச்சி துவங்குகிறது. இவ்வூரின் உள்ளூர் பிரபுவான "பெஸ்லான் டுலடொவ் (Beslan Tulatov)" நினைவாக இப்பகுதி பெஸ்லானிகொவ் (Beslanykau) எனவும் டுலடொவ் (Tulatov) எனவும் அழைக்கப்பட்டது என்ற கருத்துள்ளது. 1941ல் இந்நகருக்கு "இரிஸ்டன் (Iriston)" என்று பெயர் மாற்றப்பட்டு, அதன் பின்னர் 1950ல் பெஸ்லான் என்று பெயர் மாற்றப்பட்டது.

பள்ளி பணயக்கைதிகளின் நெருக்கடி

Thumb
பள்ளியில் படுகொலை நடந்த குழந்தைகளின் புகைப்படம்

பெஸ்லானில் நடந்த படுகொலை உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த சம்பவம் ஆகும். இவ்வூரில் உள்ள பள்ளி ஒன்றில் 2004 செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் செக்சன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அநேக பள்ளிக்குழந்தைகளையும் ஆசிரியர்களையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். அவர்களை மீட்க ரஷ்ய ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அப்போது நடந்த சண்டையில் பொதுமக்கள் 334 பேரும், குழந்தைகள் 186 பேரும் அநியாயமாக மாண்டுபோனார்கள். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள், மீதம் இருந்தவர்கள் சிறை செய்யப்பட்டனர்.

பொருளாதாரம்

ரொஸ்டொவ்-ஆன்-டான் (Rostov-on-Don) என்ற நகருக்கும் பாக்கு (Baku) என்ற நகருக்கும் இடையில் அமைந்துள்ள தொடருந்துத் தடத்தில் அமைந்துள்ள முக்கியத் தொடருந்து சந்திப்பாக உள்ளது இந்நகரம். விளாடிகாவ்கா (Vladikavkaz) நகரையடையும் மற்றொரு தொடருந்துக் கிளைத் தடம் இந்நகரிலிருந்து தொடங்குகிறது. பொருளாதார வசதிமிக்க நகரமாகத் திகழ்கிறது. விவசாயமும், தொழில் துறையும் இந்நகருக்கு வளமை சேர்க்கிறது. 1940ம் ஆண்டு இங்கு சோளம் பதப்படுத்தும் ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2002 கணக்கின் படி இங்கு ஒசெதெனியர்கள் (Ossetians) - 81.78%, ரஷ்யர்கள் - 13.51% என்ற கணக்கில் வாழ்கிறார்கள்.

கல்வி

இந்நகரில் பல பள்ளிகள் இருந்தாலும் ஐவான் (Ivan), கான்ஸ்டண்டைன் கண்டிஸ் பள்ளி (Constantine kanidis school) என்ற பள்ளிகள் முக்கியமானவையாகும். ஐக்கிய நாடுகளின் அறிவுறுத்தலின் படி கிரீஸ் மற்றும் நார்வே போன்ற நாடுகள் இங்கு உள்ள பள்ளிகளுக்கு விளையாட்டுக்கருவிகள் 2.5 மில்லியன் செலவில் அமைத்துக்கொடுத்துள்ளன.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.