தேசிய முன்னணி (மலேசியா)
From Wikipedia, the free encyclopedia
பாரிசான் நேசனல் (மலாய்: Barisan Nasional; ஆங்கிலம்: National Front; சீனம்: 国民阵线)[1] அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: BN) என்பது மலேசியாவில் சில கட்சிகளின் ஒரு கூட்டணி ஆகும்.
பாரிசான் நேசனல் | |
---|---|
நிறுவனர் | அப்துல் ரசாக் உசேன் |
தலைவர் | அகமது ஸாயித் ஹமீட் (அம்னோ) |
துணைத் தலைவர் | முகமது பின் ஹாஜி ஹசன் (அம்னோ) |
தொடக்கம் | 1973 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
உறுப்பினர் | 3 கட்சிகள் |
கொள்கை | பழைமைவாதம், இஸ்லாமிய மக்களாட்சி |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி |
நிறங்கள் | நீலம், வெள்ளை |
நாடாளுமன்ற தொகுதிகள் | 42 / 222 |
இணையதளம் | |
www |
இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1951இல் இருந்து 1972 வரை மலேசிய கூட்டணி கட்சி (ஆங்கிலம்: Alliance) எனும் பெயரில் இயங்கி வந்தது.
2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் 12-ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது.
பாக்காத்தான் ராக்யாட் எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை 2009 நெருக்கடியை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது).
அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது படாவி தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.[2][3] துணைப் பிரதமராக இருந்த நஜீப் துன் ரசாக் 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.[4][5]