மந்திரி பெசார்
மலேசியாவில் முதல் அமைச்சரைக் குறிப்பிடும் சொல்லாகும். / From Wikipedia, the free encyclopedia
மந்திரி பெசார் (மலாய்: Menteri Besar அல்லது Ketua Menteri; ஆங்கிலம்: Chief Minister); என்பது மலேசியாவில் பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட ஒன்பது மாநிலங்களின் முதல் அமைச்சரைக் குறிப்பிடும் சொல்லாகும்.
பரம்பரை ஆட்சியாளர்கள் எனப்படும் சுல்தான்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், முதல் அமைச்சரை மந்திரி பெசார் என்று அழைக்கிறார்கள். சுல்தான்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் முதல் அமைச்சரை கெத்துவ மந்திரி என்று அழைக்கிறார்கள்.
பொதுவாக மலேசியாவில் உள்ள தமிழ், சீனம், ஆங்கிலம், கடசான் மொழி ஊடகங்களில் மந்திரி பெசார் எனும் சொல் மொழிபெயர்க்கப் படாமல் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.[1]
மலேசியாவில் உள்ள அனைத்து மந்திரி பெசார்களும்; முதலமைச்சர்களும் யாங் அமாட் பெர்ஹொர்மாட் (Yang Amat Berhormat); "மிகவும் மரியாதைக்குரியவர்" எனும் முன் சொல்லுடன் அழைக்கப்படுகிறார்கள்.