மலேசியாவின் மாநிலப் பிரிவுகள்
மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் முதன்மை உட்பிரிவுகள் / From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் (ஆங்கிலம்: Divisions of Malaysia; மலாய்: Bahagian di Malaysia) என்பது மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் முதன்மை உட்பிரிவுகளாகும்.[1]
அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.[2]
அந்த வகையில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் மாவட்டங்கள், ஒரு மாநிலப் பிரிவின் துணைப் பிரிவுகள் ஆகும். ஒவ்வொரு பிரிவும் ஓர் ஆளுநர் (Resident) தலைமையில் இயங்குகிறது.