மலை இருவாட்சி
மலை இருவாட்சி, இருவாட்சிப் பறவைகளில் மிகப் பெரியவையாகும் / From Wikipedia, the free encyclopedia
மலை இருவாச்சி ("Great Hornbill") என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இருவாச்சி குடும்பத்தில் இதுவே மிகப்பெரிய பறவையாகும். இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. இது பிடிக்கப்பட்டு வளர்க்கும்போது இதன் வாழ்நாள் ஏறக்குறைய 50 ஆண்டுகள் என அறியப்படுகிறது. உருவ அமைப்பில் பெரிதாக உள்ள இப்பறவைகள், நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளன. அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பும் உள்ளது. இந்தப் பறவை ஒரு பேரலகின் மேல் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற் போல் இருப்பதால்தான் தமிழில் இருவாய்க் குருவி என்ற விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரங்களில் வசிக்கும் இந்தப் பறவைகள் பழங்கள், பூச்சிகள், சிறு பிராணிகள் போன்றவை உணவாகக் கொள்கின்றன. இது 2018 முதல் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மலை இருவாட்சி | |
---|---|
ஆண் | |
பெண் இரண்டும் மகாராட்டிராத்தின் ராய்காட்டில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. bicornis |
இருசொற் பெயரீடு | |
Buceros bicornis இலின்னேயசு, 1758 | |
வேறு பெயர்கள் | |
Buceros homrai[2] |