மிரி
சரவாக் மாநிலத்தில் உள்ள மாநகரம் / From Wikipedia, the free encyclopedia
மிரி (மலாய் மொழி: Miri; ஆங்கிலம்: Miri; ஜாவி: Jawi: ميري; சீனம்: 美里) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு, மிரி மாவட்டத்தில் உள்ள மாநகரமாகும். போர்னியோ தீவில் புரூணையின் எல்லைக்கு அருகில் உள்ளது.
விரைவான உண்மைகள் மிரி நகரம், நாடு ...
மிரி நகரம் | |
---|---|
Miri Town | |
சரவாக் | |
| |
ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
மிரி | மிரி பிரிவு |
மாவட்டம் | மிரி மாவட்டம் |
ராயல் டச்சு செல் நிறுவனம் | 10 ஆகஸ்டு 1910 |
நகராட்சித் தகுதி | 6 நவம்பர் 1981 |
மாநகர் தகுதி | 20 மே 2005 |
அரசு | |
• வகை | மிரி மாநகர் மன்றம் |
• மாநகரத் தலைவர் (Mayor) | அடாம் இ சியூ சாங் |
பரப்பளவு | |
• மிரி மாநகரம் | 997.43 km2 (385.11 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2020)[4] | |
• மிரி மாநகரம் | 3,00,543 |
• அடர்த்தி | 235/km2 (610/sq mi) |
• | Mirian |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 85 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QM; QM****A HQ |
இணையதளம் | www |
மூடு
இந்த மாநகரம் 997.43 சதுர கிலோமீட்டர் (385.11 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. கூச்சிங் மாநகரின் வடகிழக்கில் 798 கி.மீ. (496 மைல்) தொலைவிலும்; கோத்தா கினபாலுவுக்கு தென்மேற்கில் 329 கி.மீ. (204 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மக்கள் தொகை 300,543. சரவாக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது.[5]