மூக்கு
From Wikipedia, the free encyclopedia
உடற்கூற்றின்படி, மூக்கு (Nose) (Ta-மூக்கு.oggⓘ) என்பது, முதுகெலும்பிகளின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் அடிப்படையான சுவாசத்திற்காக நிகழும் செயல்முறையில் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பல விலங்குகளில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் காணப்படுகின்றன.[1]. இவை வெளிவளியில் உள்ள தூசு, துகள்கள் மூக்கு வழியாக நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும் மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், தொண்டை வழியாகச் சென்று சுவாசத் தொகுதியின் பிற பகுதிகளை அடைகின்றது.[2]
மூக்கு | |
---|---|
நாய்கள் மிகக் கூர்மையான மோப்பத் திறன் அமைந்த மூக்குகளைப் பெற்றுள்ளன | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Nasus |
MeSH | D009666 |
TA98 | A06.1.01.001 A01.1.00.009 |
TA2 | 117 |
உடற்கூற்றியல் |
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து உதடுகள் மற்றும் வாயின் மேல், முகத்தின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறது. மூக்கு எலும்புகள், மேல் மற்றும் கீழ் பக்கவாட்டு நாசிக் குருத்தெலும்புகள், மூக்குத்துளைகளைப் பிரிக்கும் நடுச்சுவர் குருத்தெலும்பு உள்ளிட்ட எலும்புகள் மூலம் மூக்கின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. பல பாலூட்டிகளில் இது நீண்டு முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும். உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றன.