யோகக் கலை
இந்தியாவில் தோன்றிய ஒரு வகை உடற்பயிற்சியும், தியானக் கலையும் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
யோகக் கலை அல்லது யோகா (ஆங்கிலம்: yóga, சமஸ்கிருதம், பாலி: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.[1]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.[2][3][4] மேலும் யோகா வஜ்ரயான மற்றும் திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.[5][6][7]