லங்காவி
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
லங்காவி அல்லது லங்காவி மாவட்டம் (ஆங்கிலம்: Langkawi; மலாய்: Langkawi; சீனம்: 浮罗交怡县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். லங்காவி என்பது ஒரு தீவு; ஒரு நகரம்; ஒரு மாவட்டம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
விரைவான உண்மைகள் லங்காவி, நாடு ...
லங்காவி | |
---|---|
Langkawi District | |
மலேசியா | |
குறிக்கோளுரை: சுற்றுலா நகரம் (City of Tourism) | |
கெடாவில் லங்காவி அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°21′N 99°48′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
நகரம் | லங்காவி |
தொகுதி | குவா |
உள்ளூராட்சி | லங்காவி நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 478.48 km2 (184.74 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 85,588 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 07xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | KV |
மூடு
இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[1]
இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.