லலித்பூர் மாவட்டம், நேபாளம்
நேபாளத்தில் உள்ள ஒரு மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
லலித்பூர் மாவட்டம் (நேபாளி: ललितपुर जिल्लाListenⓘ, நேபாள நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லலித்பூர் நகரம் ஆகும்.
- இந்தியாவிலும் லலித்பூர் மாவட்டம் உள்ளது!
லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. [1][2] லலித்பூர் மாவட்டம், காட்மாண்டு சமவெளியின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள் காத்மாண்டு மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் ஆகும்.[3]