![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b7/Linux_3.0.0_boot.png/640px-Linux_3.0.0_boot.png&w=640&q=50)
லினக்சு கருனி
From Wikipedia, the free encyclopedia
லினக்ஸ் என்பது திறந்த ஆணைமூல இயக்குதளமான குனூ/லினக்சின் (GNU/Linux) அடிப்படை மென்பொருளான கருனி (Kernel) இனது பெயராகும். லினக்ஸ் கருனி (Linux Kernel) என்பது, கணினி ஒன்று இயங்கத்தேவையான மிக அடிப்படை மென்பொருளான கருனி களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இம்மென்பொருள் லினஸ் டோர்வால்ஸ் என்பவரது முயற்சியால் 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது உலகம் எங்கும் பரந்திருக்கும் வல்லுனர்களால் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டுவருகிறது.
Linux | |
![]() | |
![]() லினக்சு கரு 3.0.0 ஆரம்பமாகிறது | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
மற்றும் சில ஆயிரம் பங்களிப்பளார்கள் |
---|---|
இயங்குதளக் குடும்பம் | யூனிக்சு குடும்பம் |
முதல் வெளியீடு | 1991 |
கிடைக்கும் மொழிகள் | ஆங்கிலம் |
அனுமதி | குனூ பதிப்பு 2[1] |
இணையத்தளம் | www.kernel.org |
பொதுவான பயன்பாட்டில் லினக்சு என்ற சொல் குனூ/இலினக்சு (GNU/Linux) இயக்குதளத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் அவ்வாறு லினக்சு என்று பயன்படுத்துவது அடிப்படையில் தவறானதாகும்.
இது முதன் முதலில் இது இன்டெல் 80386 என்ற நுண்செயலிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது மற்ற பணித்தளங்களிலும் வேலை செய்யும். அது சி மொழி மற்றும் குனூ சி மொழியின் நீட்சியின் உதவியோடும் கட்டமைப்பு மொழி (assembly language) (in the GNU Assembler's "AT&T-style" syntax) உதவியோடும் எழுதப்பட்டதாகும்.
இது குனூ பொது காப்புரிமம் (GNU General Public License) எனப்படும் காப்புரிமையின் கீழ் உருவாக்கப்பட்டவை. அதனால் லினக்ஸின் மூல நிரல் காப்புரிமை அற்றதாகும்.
கருனி என்பது சிறந்து விளங்கும் குனூ/லினக்ஸ் இயக்க அமைப்பின் மூலநிரல் மென்பொருளாகும். லினக்ஸ் கருனியானது திறந்த ஆணைமூலமாக கிடைக்கிறது. குனூ/லினக்ஸ் இயக்குதளமானது லினக்ஸ் கருனியைக் கொண்டிருக்கிறது.